இனிமையான குழந்தைகளே! சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்யுங்கள், ஆனால், குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் தந்தையை நினைவு செய்து உலகத்திற்கு அமைதியின் தானம் அளியுங்கள், தனக்குச் சமமாக ஆக்கக்கூடிய சேவை செய்யுங்கள்.
கேள்வி:-
சூரியவம்ச குலத்தில் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி என்ன செய்ய வேண்டும்?
பதில்:-1.
சூரியவம்ச குலத்தில்
உயர்ந்த பதவியை
அடைய வேண்டும்
என்றால், தந்தையை
நினைவு செய்யுங்கள் மற்றும்
பிறரையும் செய்ய
வைத்திடுங்கள். எவ்வளவுக்
கெவ்வளவு சுயதரிசன
சக்கரதாரி ஆவீர்களோ மற்றும்
ஆக்குவீர்களோ, அவ்வளவு
உயர்ந்த பதவியை
அடைவீர்கள்.2. முயற்சி
செய்து மதிப்புடன்
தேர்ச்சி (பாஸ்
வித் ஹானர்)
பெறுங்கள். தண்டனை
அடையும்படியான எந்தக்
கர்மமும் செய்யக்
கூடாது. தண்டனை அடைபவர்களின்
பதவி பிரஷ்டமாகிவிடுகிறது(கீழானதாகிவிடுகிறது).
பாடல்:-
இந்த பாவ
உலகத்திலிருந்து......
ஓம்சாந்தி.
இது குழந்தைகளின்
வேண்டுதல் ஆகும்.
எந்தக் குழந்தைகளுடைய
வேண்டுதல்? யார் இதுவரை
அறியவில்லையோ, அவர்களுடைய
வேண்டுதல் ஆகும்.
இந்த பாவ
உலகத்திலிருந்து பாபா நம்மை புண்ணிய
உலகத்திற்கு அழைத்துச்
சென்று கொண்டு
இருக்கின்றார் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது
அறிந்து கொண்டீர்கள்.
அங்கே எப்பொழுதும்
ஓய்வே ஓய்வு
தான் இருக்கும்.
துக்கம் என்ற பெயரே
கிடையாது. நாம்
அந்த சுகதாமத்திலிருந்து பிறகு இந்த
துக்கதாமத்திற்கு எவ்வாறு
வந்தோம்? என்று
இப்பொழுது தனது
உள்ளத்திடம் கேள்வி
கேட்கப்படுகிறது. பாரதம்
பழமையான தேசம்
ஆகும் என்பதை அனைவரும்
அறிந்திருக்கின்றனர். பாரதம்
தான் சுகதாமமாக
இருந்தது. ஒரே
ஒரு பகவான் பகவதியின்
இராஜ்யம் நடைபெற்றது.
பகவான் கிருஷ்ணர்,
பகவதி இராதை
அதாவது பகவான்
நாராயணர் பகவதி இலட்சுமி
இராஜ்யம் செய்தார்கள்.
இப்பொழுது பாரதவாசிகளே
தங்களை பதீதமானவர்கள்,
கீழானவர்கள் என்று ஏன்
கூறிக்கொள்கின்றனர் என்பதை
அனைவரும் அறிவார்கள்.
பாரதம் தங்கக்
குருவியாக இருந்தது,
பாரஸ்நாத், பாரஸ்நாதினியின்
இராஜ்யம் நடைபெற்றது.
பிறகு, இந்தத்
தாழ்ந்த நிலையை
எவ்வாறு அடைந்தது?
என்பதையும் அறிவார்கள்.
எனக்கும் கூட
இங்கே தான்
பிறப்பு இருக்கிறது.
ஆனால், எனது
பிறப்பு தெய்வீகமானது ஆகும்
என்று பாபா
புரிய வைக்கின்றார்.
நாம் சிவனுடைய
வம்சத்தினர் மற்றும்
பிரஜாபிதா பிரம்மா
குமாரர்கள், குமாரிகள்
ஆவோம் என்பதை
நீங்கள் அறிவீர்கள்.
ஆகையினால், காட்ஃபாதரை
(இறை தந்தையை)
அறிவீர்களா? என்று
முதன்முதலில் கேளுங்கள் என்று
பாபா புரிய
வைத்திருக்கின்றார் தந்தை
அல்லவா, பிறகு
சம்பந்தம் பற்றி என்ன
கேட்கிறீர்கள்? என்று
கூறுவார்கள். தந்தை
ஆகிவிட்டார். அனைத்து
ஆத்மாக்களும் சிவனது வம்சத்தினர்
எனில், அனைவரும்
சகோதரர்கள் ஆவார்கள்.
பிறகு, சாகார
பிரஜாபிதா பிரம்மாவுடன்
என்ன சம்பந்தம் உள்ளது?
தந்தை அல்லவா
என்று அனைவரும்
கூறுவார்கள். அவரை
ஆதிதேவன் என்றும் கூறுகின்றனர்.
சிவன் நிராகார
தந்தை ஆகிவிட்டார்
அவர் அழிவற்றவர்
ஆவார். ஆத்மாக்கள்
கூட அழிவற்றவை ஆகும்.
மற்றபடி, சாகாரத்தில்
ஒரு சரீரத்தை
விடுத்து மற்றொன்றை
எடுக்கின்றனர். நிராகார
நிலையில் சிவனது வம்சத்தினர்
ஆவோம். அதில்
பிறகு, குமாரர்
குமாரிகள் என்று
கூறப்படுவதில்லை. ஆத்மாக்களில்
குமாரர் குமாரி என்ற
நிலை கிடையாது.
பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகள் எனும்போது,
அதில் குமாரர்கள்,
குமாரிகள் இருக்கின்றார்கள். முதலிலிருந்தே சிவனுடைய வம்சத்தினர்
ஆவோம். சிவபாபா
மறுபிறப்பு எடுப்பதில்லை.
ஆத்மாக்களாகிய நாம்
மறுபிறப்பு எடுக்கிறோம்.
நல்லது, புண்ணிய
ஆத்மாக்களாக இருந்த
நீங்கள் பிறகு,
எவ்வாறு பாவ
ஆத்மாக்கள் ஆனீர்கள்?
பாரதவாசிகளாகிய நீங்கள்
தனக்குத் தானே
அடி கொடுத்துக்
கொண்டீர்கள் என்று தந்தை
கூறுகின்றார் பரமபிதா
என்றும் அழைக்கின்றீர்கள்,
பின்னர் அவரை
சர்வவியாபி என்று கூறிவிடுகிறீர்கள்.
புண்ணிய ஆத்மாவாக
ஆக்கக்கூடிய தந்தையை
நீங்கள் நாய்,
பூனை, கல்,
முள் ஆகிய அனைத்திலும்
இருப்பதாகக் கூறிவிட்டீர்கள்.
அவர் எல்லையற்ற
தந்தை ஆவார்.
அவரை நீங்கள்
நினைவு செய்கிறீர்கள். அவரே
பிரஜாபிதா பிரம்மாவின்
வாய் மூலம்
பிராமணர்களைப் படைக்கின்றார்
பிராமணர்களாகிய நீங்கள் தேவதை
ஆகிறீர்கள். பதீதத்திலிருந்து பாவனம் ஆக்கக்கூடியவர்
ஒரே ஒரு
தந்தை மட்டுமே
ஆவார். அவரை
அனைவரையும்விட அதிகமாக
நீங்கள் நிந்தனை
செய்துவிட்டீர்கள். ஆகவே,
உங்கள் மீது
தர்மராஜா; மூலம்
வழக்கு நடத்தப்படும்.
அனைத்தையும் விட
பெரிய உங்களது
எதிரி - 5 விகாரங்கள்
என்ற இராவணன் ஆவான்.
உங்களுடையது இராமர்
புத்தி ஆகும்,
மற்ற அனைவருடையதும்
இராவண புத்தி
ஆகும். இராம இராஜ்யத்தில்
நீங்கள் எவ்வளவு
சுகம் நிறைந்தவர்களாக
இருந்தீர்கள்! இராவண
இராஜ்யத்தில் நீங்கள்
எவ்வளவு துக்கம் நிறைந்தவர்கள்
ஆகிவிட்டீர்கள்! அங்கே
தூய்மையான அரச
பரம்பரை இருக்கும்.
இங்கே தூய்மையற்ற அரச
பரம்பரை உள்ளது.
இப்பொழுது யாருடைய
வழிப்படி நடக்க
வேண்டும்? பதீத
பாவனர் ஒரே
ஒரு நிராகாரமானவர் மட்டும்
தான். ஈஸ்வரன்
சர்வவியாபியாக இருக்கின்றார்
ஈஸ்வரன் ஆஜராகி
முன் நிற்கின்றார் சபதம்
கூட அவ்வாறு
எடுக்க வைக்கின்றார்கள்.
தந்தை, இந்த
சமயம் ஆஜராகி
முன்னால் இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் மட்டும்
தான் அறிந்திருக்
கின்றீர்கள். நாம்
கண்கள் மூலம்
பார்க்கின்றோம். பரமபிதா
பரமாத்மா இந்த
சரீரத்தில் வந்திருக்கின்றார்
என்பது ஆத்மாவிற்குத்
தெரிந்துவிடுகிறது. நாம் அறிந்திருக்கின்றோம்,
தெரிந்திருக்கின்றோம். சிவபாபா
மீண்டும் பிரம்மாவிற்குள்
பிரவேசம் செய்து,
நமக்கு வேத சாஸ்திரங்களின்
சாரம் மற்றும்
சிருஷ்டியின் ஆதி,
மத்திய, அந்திமத்தின்
இரகசியத்தை எடுத்துரைத்து திரிகாலதரிசியாக ஆக்கிக்கொண்டிருக்கின்றார் சுயதரிசன
சக்கரதாரியைத் தான்
திரிகாலதரிசி என்று சொல்லப்படுகின்றது.
விஷ்ணுவிடம் இந்தச்
சக்கரத்தைக் காண்பிக்கின்றனர்
பிராமணர்களாகிய நீங்கள்
தான் பின்னர் தேவதை
ஆகிறீர்கள். தேவதைகளின்
ஆத்மா மற்றும்
சரீரம் ஆகிய
இரண்டும் தூய்மையாக இருக்கின்றன.
உங்களுடைய சரீரமோ
விகாரத்தின் மூலம்
உருவாக்கப்பட்டிருக்கின்றது அல்லவா.
உங்களுடைய ஆத்மா இறுதியில்
தூய்மையாகிவிடுகிறது, ஆனால்,
சாடரமோ பதீதமாக
உள்ளது அல்லவா?
ஆகவே, உங்களுக்கு
சுயதரிசன சக்கரத்தைக்
கொடுக்க இயலாது.
நீங்கள் சம்பூரணம்
ஆகின்றீர்கள், பின்னர்
விஷ்ணுவின் வெற்றிமாலை ஆகின்றீர்கள்.
ருத்ரமாலை மற்றும்
பிறகு விஷ்ணுவின்
மாலை. ருத்ரமாலை
நிராகார மாலையாகும் மற்றும்
அவர்கள் எப்பொழுது
சாகாரத்தில் இராஜ்யம்
செய்கின்றார்களோ, அப்பொழுது
மாலை ஆகிறது.
இந்த அனைத்து விஷ்யங்களையும்
இப்பொழுது நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். பதீத
பாவனரே! வாருங்கள்
என்று பாடவும் செய்கிறார்கள்
எனில், அவர்
அவசியம் ஒருவராக
மட்டும் தான்
இருப்பார் அல்லவா?
அனைத்து தூய்மையற்றவர்களையும் தூய்மையாக்கக்கூடியவர்;
ஒரு தந்தையே
ஆவார்; எனவே,
பதீதமானவர் மிகவும் அன்பான
நிராகார இறை
தந்தை ஆகிவிட்டார்.
அவர் பெரிய
தந்தை ஆவார்.
சிறிய தந்தையையோ அனைவரும்
பாபா, பாபா
என்று அழைத்துக்கொண்டே
இருக்கின்றனர். எப்பொழுது
துக்கம் ஏற்படுகின்றதோ அப்பொழுது பரமபிதா
பரமாத்மாவை நினைவு
செய்கின்றனர். இவை
மிகவும் புரிந்து
கொள்ள வேண்டிய விசயங்களாகும்.
முதன்முதலில் இந்த விசயத்தைப்
புரிய வைக்க
வேண்டும் - பரமபிதா
பரமாத்மாவிடம் உங்களுக்கு என்ன
சம்பந்தம் உள்ளது?
சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர்.
நிராகார பரமபிதா
பரமாத்மாவின் மகிமை மிக
உயர்ந்ததாகும். தேர்வு
எவ்வளவு பெரியதோ,
அவ்வளவு பெரிய
பட்டம் (டைட்டில்)
கிடைக்கிறது அல்லவா? பாபாவினுடைய
டைட்டிலோ மிகப்
பெரியதாகும். தேவதைகளின்
மகிமை சாதாரணமானது
தான். சர்வகுண
சம்பன்னம், 16 கலைகளில்
சம்பூரணம் பெரிய
ஹிம்சை என்னவென்றால்,
காமம் என்ற
வாளால் ஒருவருக்கு ஒருவர்
ஆதி,
மத்திமம் மற்றும்
அந்திமத்தில் துக்கம்
கொடுக்கின்றனர் இது
மிகப்பெரிய ஹிம்சை ஆகும்.
இப்பொழுது நீங்கள்
இரட்டை அஹிம்சாவாதி
ஆக வேண்டும்.
பகவானின் மகாவாக்கியம்-
ஹே குழந்தைகளே!
நீங்கள் ஆத்மாக்கள்
ஆவீர்கள், நாம்
பரமாத்மா ஆவோம். நீங்கள்
63 பிறவிகளாக விஷக்
கடலில் இருந்தீர்கள். இப்பொழுது
நாம் உங்களை
பாற்கடலிற்கு அழைத்துச் செல்கின்றோம்.
மற்றபடி, கடைசி
கொஞ்ச சமயத்திற்காக
நீங்கள் தூய்மையாக
இருப்பதற்கான உறுதிமொழி செய்யுங்கள்.
இது நல்ல
வழி அல்லவா?
எங்களை பாவனம்
ஆக்குங்கள் என்று
கூறவும் செய்கின்றனர். பாவனமான
ஆத்மாக்கள் முக்தியில்
இருக்கின்றன. சத்யுகத்தில்
இருப்பது ஜீவன்
முக்தி நிலையாகும். ஒருவேளை
சூரிய வம்சத்தினர்
ஆக வேண்டும்
என்றால், முழுமையாக
முயற்சி செய்யுங்கள் என்று
தந்தை கூறுகின்றார்.
என்னை நினைவு
செய்யுங்கள் மற்றும்
பிறரையும் நினைவு
செய்ய வைத்திடுங்கள்.
எவ்வளவுக்கெவ்வளவு சுயதரிசன
சக்கரதாரி ஆவீர்களோ
மற்றும் ஆக்குவீர்களோ,
அவ்வளவு உயா;ந்த
பதவியை அடைவீர்கள். இப்பொழுது
பாருங்கள், இந்தக்
குழந்தை பிரேம்
டெராடூனில் இருக்கின்றார்
டெராடூன் வாசிகள் அத்தனை
பேரும் சுயதரிசன
சக்கர தாரிகளாக
ஆகாமல் இருந்தனர்,
இப்பொழுது எப்படி
ஆனார்கள்? பிரேம் குழந்தை
தனக்குச் சமமாக
ஆக்கிவிட்டது. இவ்வாறு
தனக்குச் சமமாக
ஆக்குவதன் மூலம்
தெய்வீக மரம் வளர்கிறது.
கண் இழந்தவர்களை
அலங்கரிக்கப்பட்டவர்களாக ஆக்குவதற்கான
முயற்சி செய்ய
வேண்டும் அல்லவா? 8 மணி
நேரம் உங்களுக்கு
சுதந்திரம் உண்டு.
சரீர நிர்வாகத்திற்காக
தொழில் முதலியவை செய்ய வேண்டும்.
எங்கே சென்றாலும்
முயற்சி செய்து
என்னை நினைவு
செய்யுங்கள். நீங்கள்
தந்தையை எவ்வளவு நினைவு
செய்கிறீர்களோ, அவ்வளவு
நீங்கள் முழு
சிருஷ்டிக்கும் சாந்தியின்
தானம் அளிக்கிறீர்கள்
என்பதாகும். நினைவின்
மூலம் சாந்தியின்
தானம் அளிப்பது
ஒன்றும் கடினமானது
அல்ல. ஆம்,
அவ்வப்போது நினைவில் அமர
வைக்கப்படுகிறது. ஏனெனில்,
குழுவின் பலம்
சேர்கிறது. சிவபாபாவை
நினைவு செய்து,
அவரிடம், பாபா,
இவர் நமது
குலத்தைச் சேர்ந்தவர்
இவரது புத்தியின்
பூட்டைத் திறங்கள்
என்று கூறுங்கள்
என்று பாபா புரிய
வைத்து இருக்கின்றார்.
இது கூட
நினைவு செய்வதற்கான
யுக்தி ஆகும்.
நடந்தாலும், போனாலும்,
வந்தாலும் சிவபாபாவின்
நினைவு இருக்க
வேண்டும், பாபா
இவருக்கு ஆசீர்வாதம்
செய்யுங்கள்- இதை
தனது பயிற்சியாக ஆக்கிக்கொள்ள
வேண்டும். ஆசீர்வாதம்
கொடுக்கக்கூடிய கருணை
உள்ளம் உடையவர்,
ஒரே ஒரு பாபா
மட்டுமே ஆவார்.
ஹே பகவான்!
இவர் மீது
இரக்கம் காண்பியுங்கள்.
பகவானைத் தான் கூறுவார்கள்
அல்லவா? அவரே
கருணைக் கடல்,
ஞானக் கடல்,
ஆனந்தக் கடல்
ஆவார்;. தூய்மையிலும் முழுமையாக இருக்கின்றார்.
அன்பிலும் முழுமையாக
இருக்கின்றார். எனவே,
பிராமண குல
பூஷ்ணர்களும் தங்களுக்குள் எவ்வளவு
அன்பாக இருக்க
வேண்டும்! யாருக்கும்
துக்கம் கொடுக்கக்
கூடாது. அங்கே மிருகங்கள்
போன்றவை கூட
யாருக்கும் துக்கம்
கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய
நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே சகோதர
சகோதரனாக இருந்தபோதிலும்,
சிறிய விசயத்திற்காக
தங்களுக்குள் சண்டை போட்டுக்
கொள்கிறீர்கள். அங்கேயோ,
மிருகங்கள் போன்றவை
கூட சண்டை
போடுவதில்லை. நீங்களும்
கூட கற்றுக்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்ளவில்லை எனில்
நீங்கள் மிகுந்த
தண்டனை அடைவீர்கள்
என்று தந்தை கூறுகின்றார்.
பதவி தாழ்ந்ததாகிவிடும்.
தண்டனைக்குத் தகுதியானவராக
நாம் ஏன்
ஆக வேண்டும்!
மதிப்போடு தேர்ச்சி
பெற வேண்டும்
அல்லவா? கடைசியில்
பாபா அனைத்து
காட்சியும் காண்பித்துக்கொண்டே இருப்பார். இப்பொழுது
குறைவான சமயமே
உள்ளது. ஆகையால்,
துரிதமாக்கிக்கொண்டே செல்லுங்கள்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது
கூட அனைவருக்கும்
ராம், ராம்
எனக் கூறுங்கள்
என்று கூறுகின்றனர்,
உள்ளத்திலிருந்து கூறுகிறார்கள். கடைசியில்
கூட சிலர்
மிகவும் தீவிரமாகச்
செல்கின்றனர். உழைத்து
முன்னேறிவிடுகின்றனர். நீங்கள்
அதிக அதிசயங்களைப்
பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
நாடகத்தின் இறுதியில்
அதிசயமான காட்சி இருக்கிறது
அல்லவா? கடைசியில்
தான் ஆஹா,
ஆஹா என்பது
ஏற்படுகின்றது, அந்த
சமயத்திலோ மிகுந்த குஷியில்
இருப்பீர்கள். யாரிடம்
ஞானம் இல்லையோ,
அவர்களோ அங்கேயே
மூர்ச்சை அடைந்து விடுவார்கள்.
அறுவை சிகிச்சை
செய்யும் நேரத்தில்
மருத்துவர்கள் பலவீனமானவர்களை
நிற்க வைப்பதில்லை.
பிரிவினையின் போது
என்ன நடந்தது,
அனைவரும் பார்த்தீர்கள்
அல்லவா? இதுவோ
மிகவும் வேதனை நிறைந்த
சமயம் ஆகும்.
இதை இரத்த
வௌ;ளம்
என்று கூறப்படுகிறது.
இதைப் பார்ப்பதற்கு
மிகுந்த தைரியம் வேண்டும்.
உங்களுடையது 84 பிறவிகளின்
கதையாகும். நாமே
தேவி, தேவதையாக
இராஜ்யம் செய்தோம். பிறகு,
மாயைக்கு வசமாகி
இல்லற மார்க்கத்தில்
சென்றுவிட்டோம், பிறகு,
இப்பொழுது தேவதை ஆகின்றோம்.
இதை நினைவு
செய்து கொண்டே
இருந்தீர்கள் என்றால்
கூட படகு
கரை சேர்ந்துவிடும்.
இதுவே சுயதரிசன
சக்கரம் ஆகும்
அல்லவா. நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிக
குழந்தைகளுக்கு, ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்காக முக்கியமான சாரம்:-
1. தந்தைக்குச் சமமாக அனைத்து குணங்களில் நிறைந்தவர் ஆக வேண்டும். தங்களுக்குள் மிகவும் அன்போடு இருக்க வேண்டும். ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.
2. போகும்போதும், வரும்போதும் தந்தையை நினைவு செய்வதற்கான பயிற்சி செய்ய வேண்டும். நினைவில் இருந்து முழு உலகத்திற்கும் அமைதியின் தானம் அளிக்க வேண்டும்.
வரதானம்:-
சங்கமயுகத்தில் சதா
பிரத்யட்ச புதிய
பழத்தை உண்ணக்கூடிய
சக்திசாலியானவர் மற்றும் ஆரோக்கியமானவர் ஆவீர்களாக
!
சங்கம யுகத்தின்
விசேஷத் தன்மை
என்னவென்றால், ஒன்றிற்கு
கோடி மடங்கு
பிராப்தம் கிடைக்கிறது மற்றும்
பிரத்யட்ச பலன்
கூட கிடைக்கிறது.
இப்பொழுது சேவை
செய்யப்பட்டது, உடனே,
இப்பொழுதே குஷி
என்ற பழம்
கிடைக்கிறது. எனவே,
பிரத்யட்ச பலன்
அதாவது புதிய
பழத்தை யார்
உண்கிறார்களோ அவர்கள் சக்திசாலியாக மற்றும் ஆரோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள். எந்த
பலஹீனமும் அவர்களிடம்
வர இயலாது.
எப்பொழுது சோம்பேறியாகி
கும்பகர்ண உறக்கத்தில்
உறங்கிவிடுகிறீர்களோ, அப்பொழுதே
பலஹீனம் வருகிறது.
விழிப்புணர்வோடு இருந்தீர்கள்
என்றால், அனைத்து
சக்திகளும் உடன்
இருக்கும் மற்றும்
சதா ஆரோக்கியமானவர்களாக இருப்பீர்கள்.
சுலோகன்:
ஒரு பிரம்மா பாபாவைப் பின்பற்றுங்கள், மற்ற அனைவரிடமிருந்தும் குணத்தை கிரஹியுங்கள்.
சாகார முரளிகளிலிருந்து
கீதையின் பகவானை நிரூபணம் செய்வதற்கான கருத்துக்கள் (வரிசை:- பாகம் 2)
1. பகவானின் மகாவாக்கியம் - நான் அனேக பிறவிகளின் கடைசியிலும் கடைசியில் உங்களுக்கு இந்த ஞானம் அளிக்கின்றேன், மீண்டும் ஸ்ரீகிருஷ்ணர் ஆவதற்காக. இந்த பாடசாலையின் ஆசிரியர் சிவபாபா ஆவார்;, ஸ்ரீகிருஷ்;ணர் அல்ல. சிவபாபா, யார் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கின்றாரோ, அவரிடமிருந்து முதன் முதலில்
சொர்க்கத்தின் இரண்டு இலைகள் இராதை, கிருஷ்ணர் வெளிப்படுகின்றார்கள்.
2. கீதையின் ஞானத்தின் மூலம் குழந்தைகளாகிய உங்களுடைய அதிர்ஷ்டம் இப்பொழுது உருவாகிறது. அனேக பிறவிகளின் இறுதியில் முற்றிலும் தமோபிரதானமாக, ஒன்றும் இல்லாதவராக (பெக்கர்) ஆகிவிட்டீர்கள், இப்பொழுது இளவரசன் ஆக வேண்டும். முதலில் அவசியம் இராதை, கிருஷ்ணர் தான் ஆவர்கள். பிறகு, அவர்களுடைய இராஜ்யம் நடைபெறுகிறது. சுயம்வரத்திற்குப் பின் இராதை, கிருஷ்ணர் இலட்சுமி, நாராயணன்
ஆகின்றார்கள்.
3. கீதையில் பகவானின் மகாவாக்கியம் என்று உள்ளது, ஆனால், பகவான் யார் என்பதையே மறந்துவிட்டனர்
சிவனுக்குப் பதிலாக கிருஷ்ணருடைய பெயரை எழுதி விட்டார்கள். உண்மையில், சிவபாபா அனைவரையும்
துக்கத்திலிருந்து விடுவித்து வழிகாட்டி ஆகி அழைத்துச் செல்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் யாரையும் விடுவிப்பதில்லை. அவர் எப்பொழுது வருகின்றாரோ, அப்பொழுது அவருக்குப் பின்னால் தேவி, தேவதை தர்மத்தின் ஆத்மாக்கள்
மேலிருந்து கீழே வருகின்றனர். தேவதைகளின் வம்சம் ஆரம்பம் ஆகிறது.
4. கீதையை படிப்பவர்களிடம் கேட்க வேண்டும் - மன்மனாபவ என்பதன் அர்த்தம் என்ன? என்னை நினைவு செய்தீர்கள் என்றால் ஆஸ்தி கிடைக்கும் என்று யார் கூறியது? புது உலகத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் கிருஷ்ணர் கிடையாது. அவரோ இளவரசர் ஆவார். பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது என்று பாடப்பட்டுள்ளது. இப்பொழுது செய்பவர் செய்விப்பவர் யார்? அவரைப் பற்றிக் கூறும்பொழுது சர்வவியாபி என்று கூறிவிடுகின்றனா;.
5. சுயம் தந்தை வந்து புது உலகை ஸ்தாபனை செய்கின்றார்;. இலட்சியம் மிகத் தெளிவாக உள்ளது. கிருஷ்ணருடைய பெயரை எழுதிவிட்டதால் மட்டுமே முழு கீதையின் மகத்துவம் போய்விட்டது. இதுகூட நாடகத்தில் பதிவாகி உள்ளது. முழு விளையாட்டே ஞானம் மற்றும் பக்தியினுடையது ஆகும். மன்மனாபவ என்பதன் அர்த்தம் என்ன? பகவான் என்று யாரை கூறப்படுகிறது? என்று நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும்
கேளுங்கள்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்றால் பின்னர் அவரை சர்வவியாபி என்று எவ்வாறு கூறமுடியும்?
6. சிவபகவானுடைய மகாவாக்கியம் - கீதையில் கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று எழுதப்பட்டிருப்பது தவறு ஆகும். ஞானக்கடல், பதீத பாவனா என்று சிவனைத் தான் கூறப்படுகிறது. ஞானத்தின் மூலம் தான் சத்கதி கிடைக்கிறது. ஒரு தந்தை தான் சத்கதியை வழங்கும் வள்ளல் ஆவார்.
7. மனிதா;கள் சிவபாபாவிற்குப் பதிலாக ஸ்ரீகிருஷ்ணருடைய பெயரை கீதையில் எழுதிவிட்டார்கள். இது பெரியதிலும் பெரிய தவறாகும். முதல் எண்ணில் இருக்கும் கீதையிலேயே தவறு செய்து விட்டார்கள். தந்தை சுயம் வந்து நானே பதீதபாவனர் ஆவேன், ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்று இந்த தவறை எடுத்துக்கூறுகின்றார் உங்களுக்கு நான் இராஜயோகத்தைக் கற்பித்து மனிதனிலிருந்து
தேவதை ஆக்கினேன். அழிவற்ற மூர்த்தி, பிறப்பு, இறப்பு அற்றவர்; என்ற மகிமை கூட என்னுடையதாகும். இந்த மகிமை கிருஷ்ணருடையது
கிடையாது.
அவரோ மறுபிறப்பு எடுக்கக் கூடியவர்.
8. என்னை நினைவு செய்யுங்கள் என்று கீதையில் நான் தான் கூறியிருக்கின்றேன், கிருஷ்ணர் இதை கூற முடியாது. ஆஸ்தி கிடைப்பதே நிராகார தந்தையிடமிருந்துதான். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளும் பொழுதே நிராகார தந்தையை நினைவு செய்ய இயலும். நான் ஆத்மா, முதலில் இந்த நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும். என்னுடைய தந்தை பரமாத்மா ஆவார். என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது நான் உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பேன், நான் அனைவருக்கும் சுகம் கொடுக்கக்கூடியவர் என்று அவர் கூறுகின்றார்
9. பகவானுடைய மகாவாக்கியம் - பகவான் பிறப்பு இறப்பு அற்றவர் என்று தந்தை புரியவைக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணரோ முழுமையான 84 பிறவிகள் எடுக்கின்றார். கீதையில் அவரது பெயரை போட்டுவிட்டனர்
நாராயணருடைய பெயரை ஏன் போடவில்லை? கிருஷ்ணர் தான் நாராயணனர் ஆகின்றார்; என்பது எவருக்கும் தெரியாது. ஸ்ரீகிருஷ்ணர் இளவரசராக இருந்தார், பிறகு, இராதையோடு சுயம்வரம் நடைபெற்றது. அதன் பிறகே ஸ்ரீலட்சுமி ஸ்ரீநாராயணர் என்று பெயர் மாறுகிறது.
10. உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஒருவரே ஆவார். அவரைத்தான் அனைவரும் நினைவு செய்கின்றனர்
இராஜயோகத்தின் இலட்சியமான இது (இலட்சுமி, நாராயணர்) எதிரில் நிற்கிறது. கிருஷ்ணரை எவரும் தந்தை என்று கூறுவதில்லை, அவர் குழந்தை ஆவார், சிவனை பாபா என்று கூறுவார்கள். அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது.
ஓம்சாந்தி
No comments:
Post a Comment