06-04-2018 காலை முரளிஓம் சாந்திபாப்தாதா மதுபன்



இனிமையான குழந்தைகளே! மம்மா பாபாவுக்கு சமமாக சேவை செய்வதற்காக உங்கள் புத்தியை சதோபிரதான் ஆக்குங்கள். சதோபிரதான் புத்தி உள்ளவர்களே தாரணை செய்து மற்றவர்களையும் செய்ய வைக்க முடியும்.
கேள்வி: இப்போது குழந்தைகளாகிய நீங்கள் செய்து கொண்டிருக்கிற உயர்ந்ததிலும் உயர்ந்த முயற்சி எது?
பதில்:        தாய்-தந்தையரின் சிம்மாசனத்தை வெல்ல வேண்டும் இதுவே அனைத்திலும் உயர்ந்த முயற்சியாகும். மம்மா பாபா வந்து உங்கள் வாரிசாக வேண்டும். அத்தகைய நம்பர் ஒன் ஆவதற்கான இலட்சியம் வையுங்கள். இதற்காக உயர்ந்ததிலும் உயர்ந்த சேவை செய்ய வேண்டும். அநேகரைத் தம்மைப் போல் ஆக்க வேண்டும். துக்கத்திலிருக்கும் மனிதர்களை சுகமானவர்களாக்க வேண்டும். அவினாசி ஞானரத்தினங்களை புத்தி என்ற பாத்திரத்தில் தாரணை செய்து மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
பாடல்:     கள்ளங்கபடமற்ற தன்மையினால் தனிப்பட்டவர்......
ஓம் சாந்தி. இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டார்கள், நமக்கு தந்தை அல்லது மாதா-பிதா கற்றுக் கொடுக் கின்றனர். குழந்தைகள் தான் இந்தக் குஷியில் இருக்க வேண்டும். இப்போது நாம் எல்லையற்ற தந்தைக்குரியவர் களாக ஆகியிருக்கிறோம். குழந்தைகள் உறுதி மொழியும் செய்கின்றனர் பாபா, இப்போது நாங்கள் உங்களுடையவர்களே தான். நாம் ஈஸ்வரனுடையவர்கள், இப்போது அசுரர்களின் சம்மந்தத்தில் இல்லை. நாம் அசுர வழிப்படி நடப்பதில்லை. அசுரவழி என்று சொல்லப்படுவது எது? ஸ்ரீமத் (வழி) படி நடக்காமல் அசுர கர்மம் செய்வது. ஒன்று ஈஸ்வரிய கர்மம், மற்றது அசுர கர்மம். இந்த விஷயத்தை யாருமே அறிந்திருக்க வில்லை. அதாவது ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை எப்போது, யார் ஸ்தாபனை செய்தார்? மற்ற அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் தர்மங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். சந்நியாசிகள் சொல்வார்கள், நமது தர்மத்தை சங்கராச்சாரியார் ஸ்தாபனை செய்தார். தேவி-தேவதா தர்மமோ இப்போது இல்லை. அதைப்பற்றிச் சொல்வது யார்? இலட்சுமி-நாராயணர் முதலானோர் பற்றி யாருக்கும் தெரியாது. தந்தையைப் பற்றியே தெரியவில்லை என்றால் முகவரியற்றவர்களாக ஆகிவிட்டுள்ளனர். இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், எல்லை யற்ற தந்தை வந்து குழந்தைகளாகிய நமக்கு சத்யுகத்திற்காக மீண்டும் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். நீங்கள் வைகுண்டத்தின் எஜமானர் ஆகவேண்டும், கிருஷ்ணபுரி செல்ல வேண்டும். இதுவோ கம்சபுரி. கம்சனும் கிருஷ்ணரும் ஒன்றாக இருக்க முடியாது.

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நஷா (பெருமிதம்) இருக்க வேண்டும், நமக்கு இப்போது பரமபிதா பரமாத்மா சகஜ இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பாபா சொல்கிறார், நான் பரந்தாமத் திலிருந்து வந்துள்ளேன். இராவணனின் இந்த பழைய உலகத்தில், பழைய சரீரத்தில். எப்படி மனிதர்கள் பித்ருவுக்குப் (மூதாதையருக்கு) படைக்கும் போது அந்த ஆத்மா பழைய சரீரத்தில் வருகின்றது. அவர்களுக்குப் பழைய உலகம் என்று சொல்ல மாட்டார்கள். பழைய சரீரத்தில் வருகின்றன, பிறகு அவற்றுக்கு உணவு, பானம் படைக்கின்றனர். இந்தப் பழக்க வழக்கம் பாரதத்தில் நடந்து வந்துள்ளது. இது பாவனையாகும். என் பதியின் ஆத்மா இந்த பிராமணர் சரீரத்தில் வந்துள்ளது என்கின்றனர். அதுபோல் பாவனை வைக்கின்றனர். கணவரின் நாம ரூபத்தை நினைவு செய்கின்றனர். ஆத்மா தான் வந்து ஏற்கின்றது. செய்கின்றது. இது இங்குள்ள வழக்கம். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் இருப்பதில்லை. வீணான செலவுகள் செய்வது, அல்லல் படுவது -- இது பக்தி மார்க்கத்தின் வழக்கம். பாவனை வைப்பதால் அல்பகால சுகம், அதுவும் பாபாவின் மூலமே கிடைக் கின்றது. பாபா ஒருபோதும் துக்கம் கொடுப்பதில்லை. மனிதர்கள் இதை தெரிந்துக் கொள்ளாத காரணத்தால் சுகம் துக்க மெல்லாம் பரமாத்மாவே தருகின்றார் எனச் சொல்லி விடுகின்றனர். பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளே! இந்த விளையாட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. யார் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர் களோ அவர்கள் தான் வந்து பிராமணர் ஆவார்கள். இவர்கள் நமது குலத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் அதிக பக்தி செய்திருக் கிறார்கள் என்பது தெரிந்து விடும். எப்படி ஒருவர் மிக நன்றாகப் படித்தால் பதவியும் நல்லதாகக் கிடைக்கும். அதுபோல் யார் அதிக பக்தி செய்திருக்கிறார்களோ, பாபா வந்து சொல்கிறார், இப்போது நான் உங்களுக்கு பக்தியின் பலனைக் கொடுக்க வந்துள்ளேன். பக்தியிலோ துக்கம் தான் அல்லவா? எவ்வளவு அலைய வேண்டியுள்ளது! இப்போது நான் உங்களை அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுவிக் கின்றேன். ஸ்ரீமத்படி நடப்பீர் களானால். பாபா ஒருபோதும் தலைகீழான வழி கூறமாட்டார். நேரடியாக நம்முன் வந்து ஸ்ரீமத் தருகின்றார். இராவணன் என்ற ஒரு பொருள் இருப்பதாகவும், யாருடைய புத்தியிலாவது வந்தமர்ந்து வழி கொடுப்பதாகவும் சொல்ல மாட்டார்கள். இவையெல்லாம் டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது. மாயாவின் காரணத்தால் மனிதர்கள் முற்றிலும் தூய்மை இல்லாதவர்களாகி விடுகின்றனர். நீங்கள் அறிவீர்கள், நாம் தேவதையாக ஆவோம். பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் தூய்மை இழக்கத் தொடங்குவோம். இந்த (பிரம்மா) பாபாவும் கூட அனுபவமுள்ள முதியவராக இருந்தார். சாது சந்நியாசிகள் அனைவரையும் பார்த்திருக்கிறார். சாஸ்திரங்களையும் படித்திருக்கிறார். தந்தை நிச்சயமாக அனுபவமுள்ள ரதத்தில் தான் வருவார். அவருக்கும் கூட நிச்சயமாக ஒரு சரித்திரம் இருக்கும். அதாவது பகவான் இந்த ஒரு ரதத்தை ஏன் ஆதாரமாக எடுத்தார்? பாகீரத் அதாவது பாக்யசாலி ரதம் என்பது பாடப்பட்டுள்ளது. பாகீரத்திலிருந்து கங்கை வெளிப்பட்டது என்கின்றனர். இப்போது நீரோட்டமுள்ள கங்கையோ வெளிப்பட முடியாது. முன்பு நாமும் கூடப் புரிந்து கொள்ளாமல் தான் இருந்தோம். பாக்யசாலி ரதமோ இந்த பிரம்மாவினுடையது அல்லவா? அதில் பரமபிதா பரமாத்மா வருகின்றார். மனிதர்களோ குழம்பிப் போகின்றனர். இந்த பிரம்மா சரீரத்தில் எப்படி வருவார்? நீங்கள் இந்த மனிதரை பிரம்மா என்று சொல்கிறீர்களா? பிரம்மாவோ பகவான் அல்லவா? சூட்சும உலகில் இருப்பவர். நீங்கள் பிறகு மனிதரை பிரம்மா ஆக்கி வைத்திருக்கிறீர்கள். இப்படியெல்லாம் சொல்வார்கள். இதுவோ இவர்களின் கற்பனை.. பிரம்மா, விஷ்ணு, சங்கர் இங்கே எங்கிருந்து வந்தார்கள்? அட, பிரஜாபிதா பிரம்மாவின் வாயின் மூலம் பிராமணர்கள் பிறந்தனர். அப்படியானால் இங்கே தான் இருப்பார் இல்லையா? என்னென்ன நடந்து முடிந்திருக் கிறதோ அவை மீண்டும் கூட நடக்கும். முஸ்லீம்கள் எப்படி வந்தனர், என்னென்ன நடந்தது, இதெல்லாம் மறுபடியும் நடக்கும். நீங்கள் டிராமாவின் இரகசியத்தை அறிவீர்கள். வேறு யாரும் அறிய மாட்டார்கள். அவர்களோ டிராமாவின் ஆயுள் இலட்சக் கணக்கான ஆண்டுகள் எனச் சொல்லி விடுகின்றனர். பிறகு சொல்கின்றனர், பிரளயமும் நடக்கின்றது என்று. இப்போது கிருஷ்ணர் வருவதாக இருந்தால் சத்யுகத்தில் வருவார் இல்லையா? அவரைப் பிறகு துவாபரயுகத்திற்கு ஏன் கொண்டு சென்றனர்? பிரளயமோ ஒருபோதும் ஏற்படுவதில்லை. பதீதபாவனா வா எனப் பாடவும் செய்கிறார்கள் என்றால் நிச்சயமாகப் தூய்மை இல்லாத உலகத்தில் வந்து தூய்மை இல்லாதவர்களை தூய்மையாக்குபவர் இல்லையா? ஞானக்கடலான நான் தான் சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ரகசியத்தைச் சொல்லிப் புரிய வைக்க முடியும். பழைய உலகைப் புதியதாக எப்படி ஆக்குகிறேன் அதை அமர்ந்து குழந்தைகளுக்குச் சொல்லிப் புரியவைக்கிறேன். அது எல்லைக்குட் பட்ட வீடு பற்றிய விஷயம், இது எல்லையற்ற வீடு. பாபாவுக்கோ அன்பு உள்ளது இல்லையா? அதனால் பக்திமார்க்கத்திலும் கூட இவ்வளவு உதவி செய்கின்றார். மனிதர்களோ செய்யவே முடியாது. சொல்கிறார்கள், ஈஸ்வரன் சுகமான பிறவியைக் கொடுத்தார். யாரிடமாவது பணம் அதிகம் இருந்தால் ஈஸ்வரன் கொடுத்தது என்று சொல்கின்றனர். பிறகு அவர் எடுத்துக் கொண்டால் ஏன் துக்கமடைய வேண்டும்? இப்போது பாபா சொல்கிறார், பாபா தவிர வேறு யார் சொல்வதையும் கேட்காதீர்கள். தந்தை, ஆசிரியர், குரு மூன்று ரூபங்களிலும் பாகத்தை நடித்துக் காட்டுகின்றார். சத்கதி தருபவர் ஒருவர் தான். குருடர்களின் ஊன்றுகோல் ஒரே பிரபு தூய்மை இல்லாதவர்களை தூய்மையாக்குபவர் ஒரே பிரபு..... பாபா சொல்கிறார், சாதுக்களையும் மீட்டெடுத்து முக்தி அளிக்க நான் வந்துள்ளேன்.

நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார் குமாரிகள். சத்யுகத்தில் இருந்தது தூய இல்லற மார்க்கம். இப்போது தூய்மை இல்லாத இல்லற மார்க்கமாக ஆகிவிட்டது. இது விகாரமுள்ள இல்லற மார்க்கம் எனப்படுகிறது. மனிதர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர், கேட்கவே வேண்டாம். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அழுது அரற்றுகின்றனர். அநேக தர்மங்கள் உள்ளன. சத்யுகத்தில் இருந்தது ஒரே தர்மம். அதை ஒரு பாபா தான் ஸ்தாபனை செய்தார். கீதையில் கிருஷ்ண பகவான் வாக்கு என எழுதப் பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஒரு பிழையாகும். பரமபிதா பரமாத்மா நிராகார். அவரது பெயர் சிவன். ஆத்மாவின் பெயர் ஒன்று தான். வேறு பெயர் கிடையாது. சரீரத்தின் பெயர் மாறுகின்றது. ஒரு சரீரம் விட்டு வேறு சரீரம் எடுத்தால் பெயர் மாறிவிடும். பாபாவின் பெயர் ஒரு சிவபாபா. அவ்வளவு தான், அவருக்கு சரீரத்தின் பெயர் கிடைப்பதில்லை. ஆத்மா 84 பிறவிகள் எடுப்பது, அதற்கு சரீரத்தின் பெயர் உள்ளது. பாபா சொல்கிறார், எனக்கு ஒரே பெயர் தான். நான் இவரது சரீரத்தில் பிரவேசமானாலும் கூட சரீரத்தின் எஜமானர் இந்த தாதாவின் ஆத்மாவாகும். அதில் பிரவேசமாகித்தான் பிரஜைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறேன். பிரஜாபிதா என்றால் நிச்சயமாக இங்கே தான் இருக்க வேண்டும் இல்லையா? மனிதர்களோ இந்த விஷயங்களைத் தெரிந்திருக்கவில்லை. இந்த ஒரு கல்லூரியில் தான் குழந்தைகள், பெண்கள், முதியோர் அனைவரும் படிக்கின்றனர். முரளி எல்லா இடங்களுக்கும் செல்கின்றது. பிறகு சிலருடைய புத்தி சதோபிரதான், சிலருடைய புத்தி சதோ, சிலருடையது ரஜோ, சிலருடையது தமோ, முற்றிலும் தாரணை ஆவதில்லை. ஆகவே அவர்களுடைய கர்மங்கள் அப்படியே இருந்து விடுகின்றது. பாபா என்ன செய்வார்? அனைவரும் ஒரே மாதிரி இருக்கவும் முடியாது. இது ஈஸ்வரிய கல்லூரி. ஈஸ்வரன் கற்றுத் தருபவர் அவர் ஒருவரே. அவர் யாருக்குக் கற்றுத் தருகின்றாரோ அவர்கள் தாரணை செய்து பிறகு ஆசிரியராக ஆகின்றனர், மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக. எனக்கு சதோபிரதான் புத்தி உள்ளதா என்று ஒவ்வொருவரும் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் பாபா மம்மா போல் மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா? பாபாவிடமோ எல்லா சென்டர்களைப் பற்றிய தகவல்களும் வரவேண்டும் எத்தனை மாணவர்கள் தவறாமல் வருகிறார்கள்? எப்போதிருந்து தூய்மையாக இருக்கிறார்கள்? பாபாவுக்கு இந்தக் கணக்கு தெரிந்தாக வேண்டும். தாய்-தந்தையர் பெரியவர்கள் இல்லையா? ஜெகதம்பா என்ற தாயும் கூட குழந்தையாக உள்ளார். இந்த (பிரம்மா) பாபா இந்த உலகத்தின் அனுபவசாலியாகவும் உள்ளார். டிராமாவில் முக்கிய நடிகர்கள் பார்க்கப்படுகின்றனர் இல்லையா? பாபா இந்த ரதத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்றால் நிச்சயமாக ஏதோ நடக்கும் இல்லையா? ஆதி தேவ் பிரம்மாவுக்கு எத்தனைப் பெயர்கள்! ஆதி தேவ் எனச் சொல்லப்படுபவர் யார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. உண்மையில் ஆதி தேவ் மற்றும் ஆதி தேவி - தாய் தந்தையாக இவர் ஆகிறார். பிறகு இவரது வாயின் மூலம் (ஞானம் கேட்டு) சரஸ்வதி என்ற தாய் வெளிப்படுகிறார் என்றால் அனைவரும் குழந்தைகள் ஆகின்றனர். இவர் (பிரம்மா) சொல்கிறார், நான் சிவபாபாவின் குழந்தையாகவும் இருக்கிறேன் என்றால் அவருக்கு யுகலாகவும் (மனைவி) இருக்கிறேன். ஏனெனில் எனக்குள் பிரவேசமாகி எனது வாய் மூலம் குழந்தைகளை உருவாக்குகிறார். எவ்வளவு ஆழமான விஷயங்கள்! சதோபிரதான் புத்தி உள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நம்பர்வார் இருக்கத் தான் செய்கிறார்கள். இராஜ பரம்பரை மற்றும் பிரஜைகளில் வித்தியாசம் இருக்கின்றது இல்லையா? பிரஜைகளும் தங்கள் புருஷார்த்தத்தின் மூலம் உருவாகின்றனர். பாபா சொல்கிறார், நீங்கள் நன்றாகப் படித்தால் உயர்ந்த பதவி அடைவீர்கள். யார் வாரிசாகிறார்களோ அவர்கள் இராஜ பரம்பரையில் தான் வருவார்கள். பாபா சொல்கிறார், முழுமையாகப் புருஷார்த்தம் செய்யுங்கள். நான் வந்திருப்பதே இராஜ்யத்தைக் கொடுப்பதற்காக. புருஷார்த்தம் செய்ய வேண்டும். நாம் தாய்-தந்தையிடமிருந்து சொர்க்க இராஜ பதவியின் ஆஸ்தியை அடைவோம். இல்லை யென்றால் சத்திரியர் ஆக வேண்டியிருக்கும். மாணவர்கள் தாங்களே கூடப் புரிந்து கொள்ள முடியும். அந்தப் பாடசாலைகளிலோ யாராவது ஃபெயிலானால் (தோல்வி) பிறகு படிக்க வேண்டும். இங்கோ பிறகு படிக்க முடியாது. ஃபெயிலானால் ஆனது தான். அதனால் புருஷார்த்தம் முழுமையாகச் செய்ய வேண்டும். அநேகரைத் தன்னைப் போலவே ஆக்குவது என்பது உயர்ந்ததிலும் உயர்ந்த சேவை. துக்கத்திலுள்ளவர்களை சதா சுகமானவர்களாக ஆக்க வேண்டும். உங்கள் வேலையே இது தான். பாபா எப்போதுமே சொல்கிறார், சிந்துவில் அநேகர் வீடுவாசலை விட்டார்கள், அதனால் நாமும் விடவேண்டியிருக்கும் என நினைக்காதீர்கள். அப்படியில்லை, அது டிராமாவில் விதிக்கப்பட்டிருந்தது. மற்றப்படி விரட்டுகிற முதலான விஷயங்கள் எதுவும் இல்லை. பகவான் தீய காரியத்தை எப்படிச் செய்வார்? இதெல்லாம் பொய்யான களங்கங்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், முதல் நம்பரில் இந்த மம்மா-பாபா பதவி அடைகிறார்கள். நீங்களும் பிறகு மம்மா-பாபாவின் சிம்மாசனத்தின் மீது வெற்றி கொள்கிறீர்கள். யார் முதல் நம்பராக இருப்பாரோ அவர் பிறகு கீழே இறங்கிக் கொண்டே செல்வார். குழந்தை கள் பெரியவர்களாகி சிம்மாசனத்தில் அமர்வார்களானால் மம்மா-பாபா இரண்டாவது நம்பரில் போய்விடுவார்கள். முதலில் ராஜா-ராணியாக இருந்தவர்கள் பிறகு சிறியவர்களாக ஆகிவிடு வார்கள் ஆகவே புருஷார்த்தம் செய்து மம்மா-பாபாவின் சிம்மாசனத்தின் மீது வெற்றியடைய வேண்டும். இப்போது வெற்றி பெற மாட்டீர்கள். வருங்காலத்தின் சிம்மாசனத்தை வெற்றி கொள்வீர்கள். மம்மா-பாபா வந்து உங்கள் வாரிசாக ஆவார்கள். பாபா குழந்தைகளுக்கு எவ்வளவு நன்றாகச் சொல்லிப் புரிய வைக்கிறார்! இந்த ஞானம் பாதரசம் போன்றது, உடனே உயர்ந்து மேலே பறந்து விடும். சிலரிடமோ கொஞ்சமும் தாரணை இல்லை. அதிசயம் இல்லையா?

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் உள்ளது, இங்கோ நிராகார் பகவான் கற்றுத் தருகிறார். கிருஷ்ணரல்ல. பகவான் வாக்கு இல்லையா? பகவானுக்கோ நீங்கள் சரீரத்தைக் கொடுக்க முடியாது. சிவபகவான் கிருஷ்ணரின் சரீரத்தின் மூலம் சொல்கிறார் இதுபோல் கூட எழுதப்படவில்லை. ஆனால் இதுவோ பகவான் வாக்கு. பாபா சொல்கிறார், முதல்முதலில் இது மனதில் வரவேண்டும் பாபா நமக்கு வந்து அமர்ந்து கற்றுத் தருகிறார். பாபா என்ற சொல் வந்ததும் ஆஸ்தி நினைவுக்கு வரவேண்டும். எவ்வளவு நாம் படிக்கிறோமோ அவ்வளவுக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவி அடைவோம். எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறோமோ அவ்வளவு விகர்மங்களின் சுமை நீங்கும். நினைவு செய்வதன் மூலம் புத்தி தங்கத்தாலான பாத்திரமாக ஆகிவிடும். தானம் செய்து கொண்டே இருந்தால் தாரணை ஆகிக் கொண்டே இருக்கும். செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையாது பாபா உங்கள் மீது திருப்தியடைவார். பிராமணர்களாகிய நீங்கள் இப்போது அவினாசி ஞானரத்தினங்களை தானம் செய்கிறீர்கள். அவர்கள் கேட்கும் சாஸ்திரங்களைத் தான் ஞானம் என நினைக் கின்றனர். இதுவே இலட்சங்கள் மதிப்புள்ள சொத்து என நினைக்கின்றனர். ஆனால் அவை சோழி மதிப்பிலானவை தான். அதனால் பாபா சொல்கிறார், குழந்தைகளின் மனதில் வரவேண்டும். நம்முடைய பாபா ஆசிரியர், சத்குருவாகவும் இருக்கிறார், உடன் அழைத்துச் செல்பவராகவும் இருக்கிறார். முக்தி ஜீவன்முக்திக்கு அழைத்துச் செல்வார். இது ஞான அமிர்தம். குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது பிரம்மச்சாரியாக இருக்கின்றனர். அழுக்காகி விட்டார்களானால் படிப்பு மந்தமாகி விடுகின்றது. புத்தி முற்றிலும் அழுக்காகி விடுகின்றது. இதுவோ ஆன்மீகக் கல்வி. பிரம்மச்சரியத்தில் இல்லையென்றால் தாரணை ஆகாது. பாபா சொல்கிறார், இப்போது படியுங்கள். இல்லையென்றால் கல்ப-கல்பமாக சொர்க்கத்தின் எஜமானர் ஆக முடியாமல் போகும். தனது புருஷார்த்தத்தின் மூலம் தான் ஆவீர்கள். பாபா ஆசீர்வாதம் செய்தால் பிறகு அனைவரையும் ராஜாவாக ஆக்க வேண்டி நேரிடும். பாபா சொல்கிறார், இதுவோ படிப்பு. படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள் என்றால் நவாப் (அதிகாரி) ஆவீர்கள். புத்தி அடி வாங்கிக் கொண்டே இருந்தால் கெட்டுப் போவீர்கள். இது மிகப் பெரிய கல்லூரி. பெயரே பிரம்மா குமார் குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ-வித்யாலயம். ஈஸ்வரனே ஸ்தாபனை செய்தது. ஈஸ்வரன் தான் தந்தை எனப்படுகிறார். ஆக, பாபா தான் தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கிறார். இதை உங்களைத் தவிர யாரும் புரிந்து கொள்வதில்லை. சத்குருவின் ரூபத்தில் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்பவர். அவர்களோ குரு ஒருவர் இறந்து விட்டால் மற்ற சிஷ்யர்களை அந்தப் பதவியில் அமர்த்துகின்றனர். இங்கோ பாபா கேரண்டி (உத்திரவாதம்) கொடுக்கிறார்... நான் அனைவரையும் என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். எங்கே? எதற்காக நீங்கள் அரைக்கல்பமாக பக்தி செய்து வந்தீர்களோ அந்த முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்வேன். பிறகு யார் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ அவர்கள் வைகுண்டத்தின் எஜமானர் (ராஜா) ஆவார்கள்.

இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. படிப்பை தாரணை செய்து மற்றவர்களுக்குக் கற்பிக்கும் தகுதியுள்ளவராக ஆக வேண்டும். மம்மா-பாபாவுக்கு சமமாக சேவை செய்ய வேண்டும்.

2. அவினாசி ஞான ரத்தினங்களை தானம் செய்து துக்கத்தில் இருக்கும் மனிதர்களை சுகமானவர்களாக ஆக்க வேண்டும். படிப்பை நல்லபடியாகப் படிக்க வேண்டும்.

வரதானம்:       சப்தங்களை கடந்த உயர்ந்த நிலையில் நிலைத்திருந்து அமைதி சக்தியின்
அனுபவம் செய்யக் கூடிய மாஸ்டர் விதை ரூபமானவர் ஆகுக.
சப்தங்களை கடந்து இருக்கக் கூடிய உயர்ந்த ஸ்திதியானது அனைத்து உலகாய (மனிதர்கள், பொருட்கள்) கவர்ச்சிகளிலிருந்து விடுபட்ட மற்றும் அன்பான சக்திசாலியான ஸ்திதியாகும். ஒரே ஒரு விநாடி இந்த ஸ்திதியில் நிலைத்து விட்டால் அதன் விளைவாக முழு நாள் காரியங்கள் செய்தாலும் தனக்குள் விசேˆமாக அமைதி சக்தியின் அனுபவம் செய்வீர்கள். இந்த ஸ்திதியை தான் கர்மாதீத நிலை, பாபாவிற்கு சமம் சம்பூர்ண நிலை என்று கூறப்படுகிறது. இதுவே மாஸ்டர் விதை ரூபம், மாஸ்டர் சர்வசக்திவான் ஸ்திதியாகும். இந்த ஸ்திதியின் மூலம் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியின் அனுபவம் ஏற்படும்.

சுலோகன்:       யாருடைய ஒவ்வொரு வார்த்தையும் மகாவாக்கியமாக


இருக்கிறதோ அவர்களே மகான் ஆத்மாக்கள்.

No comments:

Post a Comment