09.05.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா,மதுபன்

இனிமையான குழந்தைகளே! அரைகல்பமாக நீங்கள் உலகீய யாத்திரைகளைமேற்கொண்டீர்கள். இப்பொழுது ஆன்மீக யாத்திரை மேற்கொள்ளுங்கள். வீட்டில்அமர்ந்தபடியே தந்தையின் நினைவில் இருப்பது, இது அதிசயமான யாத்திரையாகும்.

கேள்வி:
குழந்தைகளின் எந்த ஒரு விஷயத்தின் மீது தந்தைக்கு மிகவும் ஆச்சரியம் ஏற்படுகிறது?

பதில்:
எந்த சொத்தை அடைவதற்காக குழந்தைகள் அரைகல்பமாக கஷ்டப்பட்டார்களோ,அழைத்துக் கொண்டே இருந்தார்களோ அந்த சொத்தை அளிப்பவர் வந்திருக்கும் பொழுதும்,அவருடையவராக ஆகிய பிறகும், கை விட்டு விடுகிறார்கள். அப்பொழுது தந்தைக்குஆச்சரியமாக இருக்கிறது. குழந்தைகள் போகப் போக உயரே ஏறுவதற்குப் பதிலாக,முற்றிலுமே கீழே விழுந்து விடுகிறார்கள். இது கூட எப்பேர்ப்பட்ட ஆச்சரியம் ஆகும்.

கேள்வி:
எந்த குழந்தைகளுக்கு தந்தை மூலமாக மிகவும் நல்ல தட்சிணை கிடைக்கிறது?

பதில்:
யார் தந்தையால் இயற்றப்பட்ட ருத்ர வேள்வியை நல்ல முறையில் பராமரிக்கிறார்களோ,மேலும் எப்பொழுதும் ஸ்ரீமத்படி நடக்கிறார்களோ, அவர்களுக்குத் தந்தை மூலமாக மிகவும்நல்ல தட்சிணை கிடைக்கிறது.

பாடல்:
நம் தீர்த்தம் தனிப்பட்டது.. .. .. ..

ஓம் சாந்தி.
ஆன்மீகப் பயணிகள் இந்த பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீக யாத்திரிகர்கள் ஆவீர்கள். அந்த யாத்திரையில் செல்பவர்களுக்கு உலகீய பயணிகள் என்றுகூறப்படுகிறது. அந்த ஸ்தூல யாத்திரைகள் கூட அரைகல்பம் நடக்கிறது. ஜன்ம ஜன்மமாகநீங்கள் யாத்திரைகள் செய்து கொண்டே இருந்துள்ளீர்கள். அவர்கள் ஸ்தூல யாத்திரைகள்மேற்கொண்டு பிறகும் திரும்பி வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். உங்களுடையது இதுஆன்மீக யாத்திரையாகும். அவர்கள் உலகீய வழிகாட்டி ஆவார்கள். நீங்கள் ஆன்மீகவழிகாட்டி ஆவீர்கள். வழிகாட்டிகளாகிய உங்களுடைய ஆசிரியர் யார்? நிராகார பரமபிதா பரமாத்மா. அவருக்கு பாண்டவ சேனையின் ஆதிபிதா என்று கூறப்படுகிறது. நாம் தேகஅபிமானியாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது தந்தை வந்துஆத்மாக்களைத் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக (தேஹீ அபிமானி) ஆத்மஉணர்வுடையவராக ஆக்குகிறார். இப்பொழுது நீங்கள் ஆன்மீக யாத்திரையில் உள்ளீர்கள்.இதில் கர்ம இந்திரியங்களின் விஷயம் இருப்பதில்லை. யாத்திரையின் பொழுதுஎப்பொழுதும் தூய்மையாக இருப்பார்கள். பின் திரும்பி வந்த உடன் விகாரி ஆகிவிடுகிறார்கள். கிரஹஸ்தியினர் தான் யாத்திரையில் செல்ல வேண்டி உள்ளது. துறவறமார்க்கம் உண்மையில் இல்லற தர்மத்திலிருந்து தனிப்பட்டது ஆகும். யாத்திரையில்கூட்டிச் செல்பவர்கள் எப்பொழுதும் பிராமணர்களாக இருப்பார்கள். பாடல் கூட உள்ளது - 4 தாமங்களையும் (இடங்களை) சுற்றி வந்தார்கள். ஆனால் பிறகும் தந்தையிடமிருந்துதூரமாக இருந்தார்கள். இப்பொழுது தந்தை யாத்திரையில் அழைத்துச் செல்வதற்காகஉங்களை தூய்மையாக ஆக்குகிறார். முக்தி தாமம், ஜீவன் முக்தி தாமத்திற்கு அழைத்துவ்செல்வார். பிறகு இந்த பதீதமான உலகத்திற்கு வர வேண்டியதே இல்லை. அந்த ஸ்தூலதீர்த்தம் சென்று பிறகு திரும்பி வருகிறார்கள். வந்து அசுத்தமான காரியம் செய்கிறார்கள்.யாத்திரையின் பொழுது கோபப்படுவதைப் கூட தடுக்கிறார்கள். குறிப்பாக அந்த காலத்தில்பதீதமாக ஆவதில்லை. நான்கு தாமங்கள் யாத்திரை செய்வதற்கு 3 - 4 மாதங்கள் பிடித்துவிடும். ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைஇப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கூடுமானவரை என் நினைவில் இருங்கள் என்பதுதந்தையின் கட்டளை ஆகும். இது முக்தி தாமத்தின் யாத்திரை ஆகும். நீங்கள் அங்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள். அங்கு இருப்பவர்கள் ஆவீர்கள். என்னை நினைவு செய்தீர்கள்என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும். மேலும் நீங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்என்று தந்தை ஒவ்வொரு நாளும் கூறுகிறார். வீட்டில் அமர்ந்தபடியே இந்த யாத்திரை செய்கிறீர்கள். எனவே அதிசயமான யாத்திரை ஆகியது அல்லவா? யோக அக்னியினால்எல்லா பாவங்களும் நீங்குகின்றன. அரை கல்பம் நீங்கள் ஸ்தூல யாத்திரை செய்துள்ளீர்கள்.முதலில் கலப்படமற்ற யாத்திரையாக இருந்தது. பிறகு கலப்படமான யாத்திரை ஆகிஉள்ளது. பூஜை கூட முதலில் ஒரு சிவனுக்கு செய்கிறீர்கள். பிறகு பிரம்மா, விஷ்ணுமற்றும் சங்கரனுக்கு, பிறகு இலட்சுமி நாராயணர் ஆகியோருக்குச் செய்கிறீர்கள்.இப்பொழுதோ பாருங்கள் நாய், பூனை, கல், மண் ஆகிய அனைத்தையும் பூஜித்துக் கொண்டேஇருக்கிறார்கள். குழந்தைகளே, இவை அனைத்தும் பொம்மைகளின் பூஜை ஆகும் என்றுதந்தை புரிய வைக்கிறார். சிவபாபா மற்றும் தேவி தேவதைகளின் தொழில் பற்றிஅறியாமல் இருக்கிறார்கள். பொம்மைகளுக்கு தொழில் என்று எதுவும் இருப்பதில்லை.சிவபாபாவின் தொழில் பற்றி அறியாமல் இருப்பது அது கல்லிற்கு பூஜை செய்தது போலஆகி விட்டது. பிறகும் கொஞ்ச நஞ்சம் மனோ விருப்பம் பூர்த்தி ஆகிறது. சத்யுகத்தில் ஸ்தூல யாத்திரைகள் இருப்பதில்லை. அங்கு கோவில்கள் ஆகியவை எங்கிருந்து வரும்? இதுவோப்ரஷ்டாசாரி இழிந்த நிலையில் இருக்கும் உலகமாகும். தங்களை பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்கள்) என்று புரிந்திருக்கிறார்கள். அதனால் தானே பாவனம் ஆவதற்காககங்கா ஸ்நானம் செய்கிறார்கள். கும்பமேளா பற்றிய இரகசியம் கூட புரிய வைத்துள்ளார்.இது உண்மையிலும் உண்மையான சங்கமம் ஆகும். ஆத்மா பரமாத்மா வெகுகாலமாகபிரிந்திருந்தனர். அழகான மேளா (சந்திப்பு) செய்து விட்டார்..... என்று பாடவும் படுகிறது.சத்குரு, பதீத பாவனர் தரகர் ரூபத்தில் வந்து சந்திக்கிறார். அவருக்கு தனக்கென்றோ உடல்கிடையாது. இந்த தரகர் மூலமாக ஆத்மாக்களாகிய உங்களை தன்னுடன் நிச்சயதார்த்தம்செய்விக்கிறார் அல்லது குழந்தைகளுக்கு தனது அறிமுகம் கொடுக்கிறார். குழந்தைகளே,நான் உங்களை சாந்தி தாமத்தின் யாத்திரையில் அழைத்து செல்ல, பாவன உலகத்திற்குஅழைத்துச் செல்ல வந்துள்ளேன். பாரதம் பாவனமாக இருந்தது என்பதை குழந்தைகள்அறிந்துள்ளார்கள். ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. ஆரிய தர்மம் இருக்கவில்லை. ஆரிய மற்றும் ஆரியரல்லாத - ஒரு வேளை தேவதைகளுக்கு ஆரியர்கள்என்று கூறுகிறார்கள் என்றால், ஆரிய தர்மத்தில் யார் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள்?படித்திருப்பவர்களுக்கு ஆரியர்கள் என்று கூறப்படுகிறது. இச்சமயத்தில் எல்லோருமேஆரியரல்லாதவர்கள், அதாவது படிக்காதவர்களாக இருக்கிறார்கள். பாப்தாதாவைஅறியாமலே இருக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார். பிறகு பிரம்மாவிஷ்ணு சங்கரன். பிறகு பிரஜாபிதா பிரம்மா. ஆக ஜகதம்பா கூட பிரஜா மாதா ஆகிறார்.இவர்கள் மூலமாக பிராமணர்களின் படைப்பு ஆகிறது. இவர்கள் தத்து எடுக்கப்பட்டகுழந்தைகள் ஆவார்கள். யார் தத்து எடுக்கிறார்? பரமபிதா பரமாத்மா. நாம் அவரதுகுழந்தைகள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆனால் தந்தையை மறந்துஅநாதை ஆகி விட்டுள்ளார்கள். இறை தந்தையின் தொழில் பற்றி யாருக்குமே தெரியாது.தந்தை வந்து அப்பேர்ப்பட்டோரை பாவனமாக ஆக்குகிறார். தந்தை தான் குழந்தைகளாகியஉங்களுக்கு தூய்மையின் கல்வி அளிக்கிறார். இப்பொழுது எங்கு செல்ல வேண்டுமோஅதை நினைவு செய்ய வேண்டும். மாயை அடிக்கடி மறக்குமாறு செய்து விடுகிறது.யுத்தக்களம் இல்லையா? நீங்கள் தந்தையினுடையவர் ஆகிறீர்கள். மாயை பிறகுதன்னுடையவராக ஆக்குகிறது. பிரபு மற்றும் மாயையினுடைய நாடகம் ஆகும். பாபாவினுடையவராக ஆகி பிறகு ஆச்சரியப்படும் வகையில் கேட்டார்கள்.... ஓடிப்போகிறவர்களாக ஆகி விடுகிறார்கள். மாயை கூட மிகவும் பலசாலி ஆகும். இந்த புத்தியோக பலத்தின் யுத்தத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் கற்பிக்க முடியாது. சர்வசக்திவான் தந்தையுடன் யோகம் கொள்வதால் தான் பலம் கிடைக்கிறது. இப்பொழுதுதூய்மையாக ஆகி பிறகு திரும்ப வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள்அறிந்துள்ளீர்கள். இங்கு பாகம் ஏற்று நடிப்பதற்காக இந்த உடலை எடுத்துள்ளீர்கள். நாம் 84 பிறவிகள் முடித்து விட்டுள்ளோம். இது கடைசியினுடைய சிறிய மகான் கல்யாணகாரியுகம் ஆகும். ஞான கங்கைகளாகிய நீங்கள் அனைவரும் ஞானக் கடலிலிருந்து வெளிப்பட்டுள்ளீர்கள்.

தந்தையை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் உங்கள் ஆயுளும் நீண்டுபோய் விடும். மேலும் வருங்கால 21 பிறவிகளுக்காக நீங்கள் அமரர் ஆகி விடுவீர்கள் என்றுதந்தை கூறுகிறார். ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படாது. குறித்த நேரத்தில்தாங்களாகவே ஒரு உடலை விட்டு மற்றொன்றை எடுக்கிறீர்கள். நடந்தாலும், போனாலும்,வந்தாலும் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். இந்த நினைவினால் நீங்கள்சிருஷ்டியை பவித்திரமாக ஆக்குகிறீர்கள். தந்தை பாவனமாக ஆக்கவே வந்துள்ளார். யார்தேவதைகளாக இருந்தார்களோ அவர்களுடையதே நாற்று நடப்பட்டு விடும். இப்பொழுதுசூத்திரர்களாக ஆகி உள்ளார்கள். வெவ்வேறு தர்மங்களில் கூட மாற்றம் ஆகிச்சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் வெளிவந்து கொண்டே இருப்பார்கள்.எல்லோருக்கும் அவரவர் பிரிவுகள் உள்ளன. இங்கு கூட அனைவருக்கும் அவரவர் பழக்க வழக்கம் உள்ளது. இது ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுகொண்டிருக்கிறது. யார் முதலில் பிராமணர்களாக ஆகி இருந்தார்களோ அவர்கள் தான்வருவார்கள். பிராமணர்கள் ஆகாமல் தேவதை ஆக முடியாது. பிரம்மாவினுடையவர்ஆகவில்லை என்றால் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெற முடியாது. யார் தேவதாதர்மத்தினரோ அவர்கள் பிராமண தர்மத்தில் அவசியம் வருவார்கள். இப்பொழுது நீங்கள் முட்களிலிருந்து மலராக ஆகி உள்ளீர்கள். யாருக்குமே துக்கம் கொடுப்பதில்லை.எல்லாவற்றையும் விட பெரிய எதிரி இராவணன் ஆவான். 5 விகாரங்கள் என்ற எதிரிமறைமுகமாக உள்ளான். அரை கல்பமாக அனைவரையும் சண்டையிடுமாறு செய்துஅவர்களை வீழ்த்தி (பதீதமாக) தூய்மையற்றவர்களாக ஆக்கி விட்டுள்ளான். இப்பொழுதுதந்தை வேள்வியை படைத்துள்ளார். எல்லையில்லாத தந்தை ருத்ர ஞான யக்ஞத்தைப் படைத்துள்ளார். அதில் எல்லாவற்றையுமே ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்ய வேண்டும். எந்தகுதிரை மீது ஆத்மா வீற்றிருக்கிறதோ - பெயரே இராஜஸ்வ - இராஜ்யத்தை அடைவதற்கானருத்ர ஞான யக்ஞம் ஆகும். சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வதற்காக எவ்வளவு பெரியவேள்வியைப் படைத்துள்ளார். இப்பொழுது இந்த உலகம் மாற்றம் அடைய வேண்டிஉள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். உள்ளத்தில் போதை இருக்கிறது. பாபா யக்ஞத்தைப்படைத்துள்ளார் - இதை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். யார் ஸ்ரீமத் படிநடப்பார்களோ அவர்களுக்கு மிகவும் நல்ல தட்சிணை கிடைக்கும். யக்ஞத்தை நன்றாகப்பராமரிக்கிறீர்கள். எனவே நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள். அந்த சொத்திற்காக நீங்கள்அரைகல்பம் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். தந்தை ஆஸ்தியை அளிக்க வருகிறார். பின்அப்பேர்ப்பட்ட தந்தையை பின் கைவிட்டு விடுகிறார்கள். தந்தை ஆச்சரியப்படுகிறார்.உங்கள் மீது சமர்ப்பணம் ஆகிறோம் என்று மணமகள்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.இப்பொழுது வந்துள்ளேன். பின் நீங்கள் என்னுடையவராக ஆன பிறகு கை விட்டுவிடுகிறீர்கள். அவர்கள் பிறகு உயர ஏறுவதற்குப் பதிலாக கீழே விழுந்து விடுகிறார்கள்.ஏறினால் வைகுண்ட சுவை ஏறி விடும்.. வித்தியாசமோ உள்ளது அல்லவா? பிரதம மந்திரிஆகியோர் எங்கே? ஏழைகள் தாழ்ந்தவர்கள் எங்கே? எனவே இப்பொழுது முயற்சி செய்துஇராஜ்யத்தைப் பெற வேண்டும். இது ருத்ர ஞான வேள்வி ஆகும். இதில் கிருஷ்ணருடையபெயரைப் போட்டு விட்டுள்ளார்கள். பக்தி மார்க்கத்திற்காக இவை எல்லா பொருட்கள் சாஸ்திரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பகவானோ ஒரே ஒருவர் ஆவார்.அவருக்கு பதீத பாவனர் என்று கூறப்படுகிறது. சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தில் யாருமேஅழைப்பது இல்லை. எனவே குழந்தைகளுக்கு முழுமையாக போதை ஏற வேண்டும். இதுருத்ர ஞான யக்ஞம் ஆகும். இதற்குப் பிறகு எந்த ஒரு வேள்வியும் இயற்றப்படுவதில்லை.அவர்கள் ஆபத்துக்களை நீக்குவதற்காக ஸ்தூல வேள்வியைப் படைக்கிறார்கள். தந்தைஎவ்வளவு பெரிய அரைகல்பத்திற்காக ஆபத்துக்களை நீக்குகிறார். இதை எந்த ஒரு சாதுசந்நியாசி கூட அறியாமல் உள்ளார்கள். பகவானால் பாடப்பட்டுள்ள முக்கியமான (கீதாமாதா) கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டுள்ளார்கள். எனவே இப்பொழுதுமனிதர்களை எச்சரிக்க வேண்டும். ஏனெனில், அவர்களுடைய புத்தியோகம் கிருஷ்ணருடன்இணைந்து விட்டுள்ளது. கிருஷ்ணரோ மன்மனாபவ  என்னை நினைவு செய்தீர்கள்என்றால் கூடவே அழைத்து செல்வேன் என்று கூறுவதில்லை. இது தந்தை வந்து இங்கு தகுதியுடையவர்களாக ஆக்குகிறார். கருமையிலிருந்து வெண்மையாக (தூய்மையாக)ஆக்குகிறார். நீங்கள் ஷியாம் கருப்பாக ஆகி விட்டிருந்தீர்கள். பாபா பிறகு சுந்தர் - அழகாகசொர்க்கத்திற்கு தகுதியுடையவர்களாக ஆக்குகிறார். நின்றாலும், நடந்தாலும் சென்றாலும்புத்தியில் பாபாவை நினைவு செய்ய வேண்டும். அவ்வளவே! இந்த நிலை அமைக்கப்பட்டுவிட்டது என்றால் உங்களது படகு எவ்வளவு கரையேறி விடும். ஹெல்த், வெல்த்,ஹேப்பினெஸ் (ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி). பாபாவிடமிருந்து நீங்கள் இவ்வளவுஆஸ்தி பெறுகிறீர்கள். எனவே அப்பேர்ப்பட்ட தந்தையை எவ்வளவு நினைவு செய்து அவரதுஅறிவுரைப் படி நடக்க வேண்டும். முட்களை மலராக ஆக்க வேண்டும். இப்பொழுது நீங்கள்மலராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இது தோட்டம் ஆகும். இப்பொழுது இருப்பதுமுட்களின் காடு ஆகும். அகாசுரன், பகாசுரன்  இவை சங்கமத்தின் பெயர்கள் ஆகும்.எல்லோருக்குமே உத்தாரம் ஆக வேண்டி உள்ளது. யார் எந்த அளவிற்கு படிப்பார்கள்,படிப்பிப்பார்கள், ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருப்பார்களோ, தந்தையிடமிருந்து 21 தலைமுறைக்கு ஆஸ்தி பெறுவார்கள். நீங்கள் சதா சுகமுடையவர்களாக ஆகி விடுவீர்கள்.இப்பொழுது குழந்தைகள் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். அசுர வழிப்படி அல்ல. என்னைஎல்லோரையும் விட அதிகமாக நிந்தனை செய்கிறார்கள் என்று தந்தை கூறுகிறார். ஒன்றுபெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கூறி விடுகிறார்கள். அல்லது பின்னர் அணுஅணுவிலும் இருக்கிறார் என்று கூறி விடுகிறார்கள். இவை எல்லாமே நாடகத்தில் பொருந்தி உள்ளது. நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசி ஆகி உள்ளீர்கள். மேலும் தந்தையை அறிந்துதந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்று கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுதோ வீணாக இரத்தம்பாயும் விளையாட்டு ஆகப் போகிறது. வீணாக ஆபத்துக்கள் வரும். எவ்வளவு பேர்இறப்பார்கள். பக்தி மார்க்கத்திலோ எத்தனை தேவிகளின் படங்களை அமைக்கிறார்கள்.செலவு செய்கிறார்கள். தேவிகளை அமைத்து பூஜை செய்து பிறகு மூழ்கடித்து விடுகிறார்கள். எனவே பொம்மைகளின் பூஜை ஆகியது அல்லவா? காளியினுடைய படம்எப்படி அமைக்கிறார்கள். அது போல யாராவது மனிதர்கள் இருப்பார்களா என்ன? நீங்கள்இங்கே அமர்ந்துள்ளீர்கள். எனவே யாத்திரையில் இருக்கிறீர்கள். டிரெயினில்அமர்ந்திருந்தாலும் கூட ஆன்மீக யாத்திரையில் இருக்கிறீர்கள். புத்தி யாத்திரையில் ஈடுபட்டுள்ளது. ஒரு வேளை புத்தியோகம் ஈடுபடவில்லை என்றால், அந்த நேரம் வீணாகிப்போய் விடுகிறது. நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று தந்தை கூறுகிறார். உங்களுடையநேரம் மிகவுமே விலைமதிப்பு வாய்ந்தது ஆகும். ஒரு நொடி கூட சம்பாத்தியம் இல்லாமல்விடாதீர்கள். தந்தையோ முழு முயற்சி செய்விக்கிறார். பாபா உலகத்தை சொர்க்கமாகஆக்குவதற்காக இந்த வேள்வியைப் படைத்துள்ளார். பாபா பாபா என்றே இருந்தீர்கள் என்றால், படகு கரையேறி விடும். நாம் பிராமணர்கள் ஆவோம். நம் மீது மிக பெரிய பொறுப்புஉள்ளது. குழந்தைகளே ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். மனம்,சொல், செயல் மூலமாக யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. மிகவும் இனிமையானவர்ஆகுங்கள். கோபத்தினால் பெரிய டிஸ்-சர்வீஸ் செய்து விடுகிறீர்கள். சம்பூர்ணமாகவோயாருமே ஆகவில்லை. பூதங்கள் மிகவுமே மோசமானவை. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்டசெல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது ஆகும். எனவே ஒரு நொடி கூட அதை சம்பாத்தியம் இல்லாமல் விட்டு விடக் கூடாது. (ஆத்மா அபிமானி) ஆத்ம உணர்வுடையவராகஇருப்பதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும்.

2. நடந்தாலும் சென்றாலும் தந்தையை நினைவு செய்து தங்களது நிலையை அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். யாருக்குமே துக்கம்கொடுக்கக் கூடாது.

வரதானம்:
எஜமானத் தன்மையின் நினைவு மூலமாக சக்திகளை ஆர்டர்படி நடத்தக் கூடிய சுயராஜ்யஅதிகாரி ஆவீர்களாக.

தந்தை மூலமாக கிடைத்திருக்கும் அனைத்து சக்திகளையும் காரியத்தில் ஈடுபடுத்துங்கள்.தக்க தருணத்தில் சக்திகளைப் பயன்படுத்துங்கள். எஜமானத் தன்மையின் நினைவில்மட்டும் இருந்து பிறகு கட்டளை இட்டீர்கள் என்றால் சக்திகள் உங்களது கட்டளையைஏற்றுக் கொண்டு விடும். ஒரு வேளை பலவீனமாக ஆகி கட்டளை இட்டீர்கள் என்றால் ஏற்றுகொள்ளாது. பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் எஜமானராக ஆக்குகிறார்.பலவீனமானவராக அல்ல. எல்லா குழந்தைகளுமே இராஜா குழந்தைகள் ஆவார்கள்.ஏனெனில் சுயராஜ்யம் உங்களுடைய பிறப்புரிமை ஆகும். இந்த பிறப்புரிமையை யாருமேபறிக்க முடியாது.

சுலோகன்:
திரிகாலதரிசி ஸ்திதியில் நிலைத்திருந்து ஒவ்வொரு செயலையும் செய்தீர்கள் என்றால்,வெற்றி கிடைத்து கொண்டே இருக்கும்.

ஓம்சாந்தி
  

No comments:

Post a Comment